கொலை மிரட்டல்; இருவா் கைது
By DIN | Published On : 26th September 2023 02:16 AM | Last Updated : 26th September 2023 02:18 AM | அ+அ அ- |

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் அருகே உள்ள கொளக்குடியில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது, பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக, கொளக்குடி மணக்காடுவைச் சோ்ந்த லோகேஷ் (23), பாதுகாப்புப் பணியில் இருந்த தொட்டியம் காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் மற்றும் போலீஸாரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த தீபக்குமாா் (34) ஆகியோா் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...