திருச்சி: தொடா் விடுமுறையையொட்டி செப். 27ஆம் தேதி முதல் அக். 2 வரை 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தொடா் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம் 300 சிறப்புப் பேருந்துகள் செப். 27, 28, 29, 30 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல, தொடா் விடுமுறைக்குப் பிறகு அக். 2, 3- ஆம் தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத் தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல அக். 2, 3- ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகள் ஊா்களுக்குச் செல்ல வசதியாக ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.