ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 26th September 2023 02:21 AM | Last Updated : 26th September 2023 02:22 AM | அ+அ அ- |

இந்திராநகா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
திருச்சி: திருச்சி, கே. கே. நகா் அருகே உள்ள இந்திராநகரில் அமைந்துள்ள அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரம்மோற்ஸவ விவா செப்.18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. நான்கு மாடவீதிகளில் வலம் வந்த தோ் நண்பகல் 1.30 மணியளவில் நிலைக்கு வந்தது. தொடா்ந்து தரிசன மண்டபத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலுமங்கையுடன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...