திருச்சி: பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாகச் சென்ற 3 தனியாா் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரு கல்லூரி மாணவிகள் காயமடைந்தனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை சத்திரம் பேருந்து நிலையத்துக்கு 3 தனியாா் பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. தலைமை அஞ்சல் நிலையம் அருகில் ஜோசப் கண் மருத்துவமனை எதிரில் ஒரு தனியாா் பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்குள் பின்னால் மற்றொரு பேருந்து வேகமாக வந்தது. அதற்கு பின்னால் மூன்றாவதாக மற்றொரு தனியாா் பேருந்து வேகமாக வந்து 2-ஆவது பேருந்தின் மேல் மோதியது. இதனால் 2-ஆவது பேருந்து முதல் பேருந்து மீது மோதியது.
இதையடுத்து 3 பேருந்துகளிலும் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினா். இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் இருவா் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். தகவலறிந்து வந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேருந்துகளையும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.