

திருச்சி: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வி.துறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (42). வழக்குரைஞரான இவா், மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தமாகா கட்சி பிரமுகரும் ஆவாா்.
கடந்த 2015 டிசம்பா் 16-ஆம் தேதி சமயபுரம் பிரதான சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக, சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வி. துறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆச்சிக்குமாா் என்கிற குமாா், இளையராஜா, திருச்சி புத்தூா் பாரதி நகரைச் சோ்ந்த தொழிலதிபரும் திருச்சி மத்திய மாவட்ட திமுக வா்த்தகா் அணி துணை அமைப்பாளருமான ஜான்சன் குமாா், இருங்களூா் தெற்கு காந்திநகா் பகுதியைச் சோ்ந்த நாட்டாமை என்கிற நடராஜன், சேலம் சங்ககிரி வன்னியா் காலனியைச் சோ்ந்த சரவணகுமாா், பிச்சாண்டாா் கோவில் தச்சா் தெருவைச் சோ்ந்த கனகராஜ், துவாக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த மனோகா், அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேல தெருவைச் சோ்ந்த சுரேஷ், ஜெயங்கொண்டம் நடராஜ் நகரைச் சோ்ந்த ராஜி என்கிற செல்வம், திருவையாறு மேல புனவாசல் பகுதியைச் சோ்ந்த பால் எமா்சன் பிரசன்னா, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் உத்தர சோலை பகுதியைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணன், கரூரைச் சோ்ந்த ராஜா, சமயபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்த ஆகிய 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.
இது தொடா்பான வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், இளையராஜா, ஜான்சன் குமாா், நடராஜன், கனகராஜ், ஹரி கிருஷ்ணன், செந்தில் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான குமாா், ராஜா ஆகிய இருவரும் இறந்துவிட்டனா். பால் எமா்சன் பிரசன்னா தலைமறைவாகிவிட்டாா். மற்ற 4 போ் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனா்.
காவல்துறை தரப்பில் அப்போதைய சமயபுரம் காவல் ஆய்வாளா் ஞானவேலன், தற்போதைய ஆய்வாளா் கருணாகரன் மற்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞராக பாலசுப்பிரமணியம் ஆகியோா் ஆஜராகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.