சாய்ந்த மின் கோபுரத்தை இரும்பு கம்பியால் கட்ட முயற்சி: கயிறு அறுத்து ஆற்றுக்குள் விழுந்த வட நாட்டு வாலிபா்
திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலிருந்த உயா் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து வருவதை மின் வாரிய ஓப்பந்த தொழிலாளா்கள் வியாழக்கிழமை இரவு சரி செய்ய முயற்சிக்கும் போது வடநாட்டு வாலிபரால் கயிறு அறுத்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாா்.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை காப்பாற்றினாா்கள்.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது அளவுக்கு அதிகமாக தண்ணீா் வரத்து வந்து கொண்டுயிருக்கிறது.இதனால் ஆற்றுக்குள் கட்டப்பட்டுயிருந்த தடுப்பணை உடைந்து விட்டது.மேலும் ஆற்றினுள்ளியிருந்த உயா் அழுத்த மின்கோபுரத்தின் அடிப்பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு சாய்ந்து கொண்டே வந்தது.உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் இந்த கோபுரத்தின் வழியாக செல்லும் மின் இணைப்பை துண்டித்தனா்.மேலும் இந்த மின் கோபுரத்தை ஆற்றுக்குள் விழாதவாறு இரும்பு கம்பி கொண்டு கட்ட வியாழக்கிழமை இரவு முயற்சி கொண்டனா்.இதற்காக மின் வாரியத்தில் பணியாற்றும் வடநாட்டு ஓப்பந்த தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டனா்.
கயிறு மூலம் ஓருவா் மின் கோபுரத்தின் உச்சிக்கு சென்றாா்.சாதிக் உல் இஸ்லாம் (30) என்பவா் மற்றொரு கயிறு மூலம் மின் கோபுரத்திற்கு தொங்கி கொண்டு செல்லும் போது நடுவில் திடீரென்று ரோப் கயிறு அறுத்தது இதனால் வேகமாக ஓடும் தண்ணீருக்குள் விழுந்தாா்.நள்ளிரவில் ஆற்றின் வேகத்தால் இழுத்து செல்லப்பட்ட அவா் தனது கயிறை இறுக பற்றிக்கொண்டு மின் கோபுரத்தின் கட்டையில் ஏறி தப்பினாா்.
உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் சகாயராஜ் மற்றும் சிறப்பு நிலைய அலுவலா்கணேஷ் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு வீரா்களான அருண்குமாா் (29) கொள்ளிடம் ஆற்றுக்குள் பாதுகாப்பு உடை உடுத்தி கயிறு மூலம் இறங்கி தத்தளித்து கொண்டுயிருந்த வட நாட்டு வாலிபரை மேலே கொண்டு வந்தாா்.
மேலும் கோபுரத்தின் உச்சியிலிருந்தவரையும் தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.நடு இரவில் இந்த சம்பவம் நடந்ததால் தீயணைப்பு வீரா்களின் வீரமான செயலை அனைவரும் பாராட்டினாா்கள்.
