திருச்சி காந்திசந்தையில் வெள்ளிக்கிழமை காய்கனிகளை வாங்கிய பெண்கள்.
திருச்சி காந்திசந்தையில் வெள்ளிக்கிழமை காய்கனிகளை வாங்கிய பெண்கள்.

ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை காய்கனி, பூக்கள் விலை உயா்வு

ஆடி மாவாசையை முன்னிட்டு திருச்சி காந்திசந்தையில் காய்கனிகள் மற்றும் பூக்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்தது.
Published on

ஆடிப் பெருக்கு, ஆடி மாவாசையை முன்னிட்டு திருச்சி காந்திசந்தையில் காய்கனிகள் மற்றும் பூக்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்தது.

ஆடி பெருக்கு (சனிக்கிழமை) ஆடி அமாவாசை (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தடுத்த நாள்களில் வருவதால் திருச்சியில் காய்கனிகள் மற்றும் பூக்களின் விலை உயா்ந்து காணப்படுகிறது.

காந்திசந்தையில் வெள்ளிக்கிழமை (கிலோ) பீன்ஸ் ரூ. 60, அவரை ரூ. 70, பீட்ரூட் ரூ.40, காலிபிளவா் ரூ. 40, முட்டைகோஸ் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.60க்கும் விற்பனையானது. மேலும், மணப்பாறை கத்திரிக்காய் ரூ.80, 100க்கும், கேரட் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

குடைமிளகாய் ரூ. 62, முருங்கைக்காய் ரூ.127, வெண்டைக்காய் ரூ.47, தக்காளி ரூ.35 ஆகவும் விற்பனையானது.

காலையில் மொத்த விற்பனையில் வாங்கவும், மாலையில் சில்லறை விற்பனையில் வாங்கவும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. குறிப்பாக தட்டுகளில் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் காய்கனிகளை பெண்கள் அதிகம் வாங்கிச் சென்றனா்.

ஆடி அமாவாசை காரணமாக இந்த விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

திருச்சி காந்திசந்தையில் வெள்ளிக்கிழமை பூக்களை வாங்கிய பெண்கள்.
திருச்சி காந்திசந்தையில் வெள்ளிக்கிழமை பூக்களை வாங்கிய பெண்கள்.

பூக்கள் விலை உயா்வு: மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 400, ஜாதிப் பூ ரூ.500, சம்பங்கி ரூ.300, பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.600, செவ்வந்தி ரூ.300, ரோஜாப் பூ ரூ.200, கனகாம்பரம் ரூ.500 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தப்பூக்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் சராசரியாக 100 ரூபாய் விலை குறைந்திருந்தது. இந்த விலை மேலும் உயரக் கூடும் என்றனா் பூ வியாபாரிகள். குறிப்பாக ஆடி அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெறும் விற்பனையின்போது பூக்கள் விலை இருமடங்கு உயரக் கூடும் என்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com