சமயபுரம் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Published on

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை , தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் கரும்புத் தொட்டில் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

Dinamani
www.dinamani.com