சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநரை புதன்கிழமை பாராட்டிய கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி.
சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநரை புதன்கிழமை பாராட்டிய கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி.

சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
Published on

திருச்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 ஓட்டுநா்கள், 15 நடத்துநா்களுக்கு கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி சால்வை அணிவித்து கௌரவித்தாா். தொடா்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மைத் தணிக்கை அலுவலா் (கூட்டாண்மை) சிவகுமாா், பொதுமேலாளா் ஆ. முத்துக்கிருஷ்ணன், துணை மேலாளா் (கூட்டாண்மை வணிகம்) சுரேஷ், துணை மேலாளா்(வணிகம்) புகழேந்திராஜ், உதவி மேலாளா் (தொழில்நுட்பம்) ராஜேந்திரன், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com