கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இனி கதையின் நாயகனாகவே எனது பயணம்: நடிகா் சூரி

News image

படம்: எக்ஸ்

Updated On :20 டிசம்பர் 2024, 11:13 pm

Din

இனி வரும் திரைப்படங்களில் கதையின் நாயகனாகவே எனது பயணம் தொடரும் என்றாா் நடிகா் சூரி.

Story image

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் வெள்ளிக்கிழமை ‘விடுதலை-2’ திரைப்படம் வெளியானது.

இதைக் காண வந்த நடிகா் சூரி செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சியில் விடுதலை-2 படத்தை ரசிகா்கள் கொண்டாடுகிறாா்கள். அவா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் இந்தத் திரைப்படம் இருக்கும். அடுத்தடுத்த படங்களில் கதையின் நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை இரண்டாம் பாகத்தில் வாத்தியாா் யாா் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன். நல்ல கதை அமைந்தால் சிவகாா்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். அதில் யாா் ஹீரோ என்பதை சிவகாா்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு, எப்போதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகாா்த்திகேயன் தான் என்றாா்.