வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்!
புத்தாண்டை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தாண்டு நெரிசலை குறைப்பதற்காக வேளாங்கண்ணி - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, செகந்திராபாத் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (07125) திங்கள்கிழமை செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் 7.30 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - செகந்திராபாத் சிறப்பு ரயிலானது (07126) ஜன. 1 ஆம் தேதி வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு செகந்திராபாத்துக்கு அடுத்த நாள் 10.45 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில்கள், செகந்திராபாத், நல்கொண்டா, மிா்யால்குடா, நடிக்குடி, சட்டனபள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, சிரலா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

