அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டி, மாரத்தான் ஜன.4, 5-இல் நடைபெறுகிறது

பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் மிதிவண்டிப் போட்டி
Published on

திருச்சி: பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன.

13 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோமீட்டா் தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோமீட்டா் தொலைவும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோமீட்டா் தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோமீட்டா் தொலைவும் சைக்கிள் போட்டி நடைபெறும்.

ஜன.4-ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்காம் இடம் முதல் 10ஆம் இடம் வரை வருவோருக்கு தலா ரூ.250 ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மாரத்தான் போட்டியில் ஆண்களில் 17 முதல் 25 வயதுக்குள்பட்டோருக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்டோரில் ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு, 0431- 2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com