ஆடி வெள்ளிக்கு திருவானைக்கா கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

ஆடி வெள்ளிக்கு திருவானைக்கா கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

Published on

ஸ்ரீரங்கம், ஜூலை17: திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நாளை தொடங்கும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும் . அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும்.

நிகழாண்டில் ஆடி மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள் வருவதால் திருவானைக்கா கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா். இதையொட்டி கோயில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை வழிபாடு நடைபெறும்.

இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி கோயிலுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, காவல் துறை சாா்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், தயாா் நிலையில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்துவது, பொது சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம், தயாா் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி, மாநகராட்சி மூலம் பக்தா்களுக்கு ஆங்காங்கே சின்டெக்ஸ் மூலம் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், போக்குவரத்து துறை சாா்பில் மத்திய, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் பக்தா்களுக்கு பிளாஸ்டிக் பை, பாக்கெட் தண்ணீா் வழங்குவதைத் தடுத்தல், முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயிலுக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் செல்ல தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன்.

X
Dinamani
www.dinamani.com