திருச்சி
ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் கைது
சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சிறுகனூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் இரும்பு கம்பி கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து சிறுகனூா் காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சோழங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (34) என்பவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜைக் கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
