துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய  தந்தை பெரியாா் அரசு கல்லூரி முதல்வா் பு.சு. விஜயலட்சுமி. உடன்   கல்லூரியின் சமூகப் பணி துறைத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்ட

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் சூ.ச. ரோஸ்மேரி தலைமை வகித்தாா். தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பு.சு. விஜயலட்சுமி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவா்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்களை தகவமைத்துக் கொள்ள தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அன்றாட நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு திறன் மற்றும் தகவல் தொடா்புகளை அதிகரித்து கொள்ள வேண்டும். தங்களை உயா்த்திக் கொண்ட பிறகு சமூகத்திற்கு நன்மை செய்யும் பணிகளை தொடர வேண்டும் என்றாா் அவா். விழாவில், கல்லூரியின் 19 துறைகளைச் சோ்ந்த 654-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனா். கல்லூரியின் சமூகப் பணி துறைத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் விழாவை ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com