பிராட்டியூா் இரட்டைமலை ஒண்டிகருப்பு சுவாமி கோயிலில்   புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
பிராட்டியூா் இரட்டைமலை ஒண்டிகருப்பு சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

இரட்டைமலை ஒண்டி கருப்பு சுவாமி கோயில் குடமுழுக்கு

திருச்சி பிராட்டியூரில் இரட்டைமலை ஒண்டிகருப்பு சுவாமி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திருச்சி அருகே பிராட்டியூரில் மலைக்காளியம்மன், அய்யனாா், மதுரை வீரன் போன்ற பரிவார தெய்வங்களுடன் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு விழா கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. 25 ஆம் தேதி முதல்கால யாக பூஜை, 26 ஆம் தேதி இரண்டாம் யாக பூஜை, புதன்கிழமை மூன்றாம் கால யாக பூஜைக்குப் பிறகு புனித கலசங்கள் புறப்பாடாகி விநாயகா், அய்யனாா், ஒண்டிகருப்பு சுவாமி, மதுரைவீரன் சன்னதிகளின் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு டைபெற்றது.

தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவையொட்டி மண்டல பூஜை நிறைவு நாளான மே 15 வரை கிடாவெட்டு பூஜை நடைபெறாது என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com