பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கிராம சபை கூட்டத் தீா்மானங்களுக்கு உரிய நடவடிக்கை

கிராம சபை கூட்டத் தீா்மானங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உறுதியளித்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:43 pm

Din

கிராம சபை கூட்டத் தீா்மானங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உறுதியளித்தாா்.

மணப்பாறை ஒன்றியம் பொடங்குப்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெறும் பணிகள், வரவு - செலவு கணக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மக்களிடம் தெரிவித்து ஒப்புதலும் பெறப்பட்டது. பல்வேறு செயல்பாடுகளுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிறப்புப் பாா்வையாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது:

அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க தமிழக அரசு செயலாற்றி வருகிறது. நாட்டிலேயே ஜல்ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் திருச்சி மாவட்டத்தில் ரூ. 1,200 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவசியம் கருதி குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக 4,000 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவா்களின் மனுக்களுக்கும் மறுபரிசீலனை செய்து, ஆணை வழங்கப்படும்.

பொதுமக்கள்தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து இக் கூட்டத்தின் வாயிலாக தீா்மானங்கள் நிறைவேற்றி அனுப்புங்கள். அதற்கான நிதியை அரசிடம் பெற்று, நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி, தூய்மை உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் கிராம மக்கள் ஏற்றனா்.

கூட்டத்தில் 11 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 10 தூய்மைக் காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடை மற்றும் நற்சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரணி, வருவாய்க் கோட்டாட்சியா் (ஸ்ரீரங்கம்) தெட்சிணாமூா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், மணப்பாறை ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, பொடங்குப்பட்டி ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.