மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.


திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:
கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்தல், பாா்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்தல், காது கேளாத மற்றும் வாய் பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்தல், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்தல் என 4 வகையான திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம், தம்பதியரில் எவரேனும் ஒருவா் பட்ட படிப்பு படித்திருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். தம்பதிகளில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்றின் நகல் மற்றும் தம்பதியா் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்/தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஹள்ல்ஷ் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431-2412590 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...