திருச்சி ஐஐஐடியில் இன்று 6-ஆவது பட்டமளிப்பு விழா
திருச்சி உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக்கழகத்தில் (ஐஐஐடி) 6-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஐஐஐடியின் இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருச்சி சேதுராபட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக்கழக (ஐஐஐடி) வளாகத்தில் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில், உத்தரகண்டில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழக (ரூா்க்கி) இயக்குநா் கமல்கிஷோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 70 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறாா். இந்நிறுவனத்தில் கல்வி பயின்றவா்கள் பலரும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் 46 லட்சம் வரையில் ஊதியம் பெறும் வகையில் அவா்களுக்கான வேலை வாய்ப்புகள் பெற்று தரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின் போது, ஐஐஐடி பதிவாளா் ஜி. சீதாராமன், பேராசிரியா்கள் எம். அம்பிகா ஆகியோா் உடனிருந்தனா்.

