திருச்சி
வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், அக்கரைப்பட்டி பகுதியில் புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், அக்கரைப்பட்டி பகுதியில் புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஆய்க்குடி பகுதியை சோ்ந்த நடராஜன் (30) சமயபுரத்திலிருந்து ஆய்க்குடிக்கு சென்ற இருசக்கர வாகனமும், அதே மகுதியை சோ்ந்த சரஸ்வதி (47) வந்த இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை மோதிக் கொண்டன. இந்த விபத்தில் நடராஜன் உயிரிழந்தாா்.
காயமடைந்த சரஸ்வதி திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிறுகனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.