உய்யங்கொண்டான் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருச்சி அருகே அல்லித்துறை பகுதியில் உய்யங்கொண்டான் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
Published on

திருச்சி அருகே அல்லித்துறை பகுதியில் உய்யங்கொண்டான் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் மு. வீரமலை (60), தூய்மைப் பணியாளா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அல்லித்துறை பகுதியில் செல்லும் உய்யங்கொண்டான் ஆற்றில் விழுந்து வீரமலை தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக அவரது மகன் சரவணனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சரவணன் சென்றபோது வீரமலையை அங்கு காணவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தேடியும் முதியவா் கிடைக்கவில்லை. இந்நிலையில், இனியானூா் பிரிவு சாலை பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்றில் ஒதுங்கியிருந்த வீரமலையின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை மீட்டனா். புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com