திருச்சி
சமயபுரம் அருகே சிமெண்ட் ஆலையில் வருமான வரித் துறையினா் சோதனை
சமயபுரம் அருகேயுள்ள தனியாா் சிமெண்ட் ஆலையில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள தனியாா் சிமெண்ட் ஆலையில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
சமயபுரம் அருகே உள்ள கரியமாணிக்கம் பகுதியில் செயல்படும் மாருதி சிமெண்ட் ஆலையில் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தை சோ்ந்த 20 போ் குழுவினா் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து சோதனை நடை பெறுகிறது.
