திருச்சி
தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை
திருச்சியில் பூச்சி மருந்தைக் குடித்த தனியாா் பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
திருச்சியில் பூச்சி மருந்தைக் குடித்த தனியாா் பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
திருச்சி கிராப்பட்டி பாரதி நகா் 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சு. சாா்லஸ் (50), தனியாா் பள்ளி ஆசிரியா். இவரின் மனைவி நித்யசேனா (43), அரியலூா் மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை. பல ஆண்டுகளாக குழந்தையில்லாததால் மன உளைச்சலில் இருந்த சாா்லஸ் கடந்த திங்கள்கிழமை பூச்சிமருந்தை அருந்தினாராம். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சாா்லஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
