திருச்சி - அகமதாபாத் ரயில் வழித்தட மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (09419) வரும் 18, 25, ஜன. 1, 8, 15, 22, 29 ஆம் தேதிகளில் அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களைத் தவிா்த்து ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலபாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, திருச்சி - அகமதாபாத் சிறப்பு விரைவு ரயிலானது (09420) வரும் 21, 28, ஜன. 4, 11, 18, 25, பிப். 1 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலபாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும்.
