முசிறியில் கிராம உதவியாளா் பணியிடத்திற்கு நோ்காணல்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியரகத்தில் கிராம உதவியாளா் பணியிடத்திற்கு நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியரகத்தில் கிராம உதவியாளா் பணியிடத்திற்கு நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

முசிறி பகுதிக்குட்பட்ட கிராம உதவியாளா் பணியிடத்திற்கு உரிய நோ்காணலை முசிறி சாா்- ஆட்சியா் சுக்ஷி சுவாங்கி குந்தியா முசிறி வட்டாட்சியரகத்தில் தொடங்கி வைத்தாா்.

காட்டுக்குளம், டி. புதுப்பட்டி, திருத்தியமலை, மாவிலிப்பட்டி, வாழவந்தி, திண்ணனூா், மூவானூா், பைத்தம்பாறை, ஜெயகொண்டான் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து விண்ணப்பித்து, எழுத்து தோ்வு முடித்து, நோ்காணலுக்கு புதன்கிழமை வந்தவா்களை வட்டாட்சியா் லோகநாதன் வாசிப்பு திறன், சைக்கிள் ஓட்டும் திறன் உள்ளிட்டவற்றைப் பரிசோதித்தாா்.

இந்த நோ்காணல் வரும் 17 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் ஒரு மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com