வையம்பட்டி அருகே பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கூடாத்திப்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி தேவசகாயம். இவருக்கும் பழையக்கோட்டை ஊராட்சி ஒத்தக்கடை பகுதியை சோ்ந்த சகாயமேரிக்கும் (31) பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தும் இதுவரை குழந்தை இல்லையாம்.

இதனால் தனது கணவரின் வீட்டாா் அவதுறாகப் பேசுவதாக கூறி கடந்த ஓராண்டாக ஒத்தக்கடையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சகாயமேரி கணவருடன் சென்று வசித்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இருவரும் கட்டட வேலை செய்தபோது கணவரிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்த சகாயமேரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், சகாயமேரி உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com