திருச்சி
திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்
பண்டிகை, விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவு பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு வியாழக்கிழமை கூறியதாவது:
திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்படும் ஏடிஆா் விமானத்தில் 72 போ் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விடுமுறை தினத்தைக் கருத்தில்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி வரை ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது. இதில், 200 போ் வரை பயணம் செய்ய முடியும். இந்த விமானங்கள் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையிலும் இயக்கப்படவுள்ளது என்றாா்.

