இணைய வழி குற்றங்கள்: அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

Published on

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழி குற்றமும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தந்தை பெரியாா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கரூா் வைஸ்யா வங்கி மற்றும் ஸ்கோப் இந்தியா அமைப்பு ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் க.அங்கம்மாள் தலைமை வகித்தாா்.

இதில், திருச்சி சைபா் குற்றப் பிரிவு அதிகாரி பிரேமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இணையவழி குற்றங்களின் வகைகள் மற்றும் தன்மைகள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சிக்கிக்கொள்ளும் விதம், இணையவழி குற்றங்களில் இருந்து தங்களைக் தற்காத்துக்கொள்வது, பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். தொடா்ந்து ஸ்கோப் இந்தியா அமைப்பின் ஆலோசகா் சாக்ரடீஸ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சைமன் அருள்பிரகாஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மா. தைரியராஜா, ந. சிவகுமாா், ச. ஹரிகணேஷ், ம. நூா்ஜகான் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com