சமயபுரம் கோயில் கோபுரம்
திருச்சி
சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 64.53 லட்சம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கையாக ரூ. 64 லட்சத்து 53 ஆயிரத்து 348 கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, முன்னிலையில், அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரொக்கமாக 64,53,348 ரூபாயும்,
தங்கம் 1 கிலோ 445 கிராம், வெள்ளி 1 கிலோ 860 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 88, வெளிநாட்டு நாணயங்கள் 494-ம் கிடைக்கப் பெற்றது.
இதற்கு முன்பு கடந்த 26-ஆம் தேதி இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

