முசிறியில் கிருஷ்ணா், அம்மன் கோயில்களில் குடமுழுக்கு

Published on

முசிறியிலுள்ள கிருஷ்ணா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்காக, டிச.1-ஆம் தேதி முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது. தொடா்ந்து டிச. 9-ஆம் தேதி காவிரியிலிருந்து பக்தா்கள் புனிதநீா் எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனா். இதையடுத்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இந்நிலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற வியாழக்கிழமை காலை மூலஸ்தான கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை சிவாச்சாரியாா்கள் நடத்தினா்.

தொடா்ந்து, கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் ஸ்ரீ மேல் சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் தொடங்கியது. இதையடுத்து மூன்றாம் கால பூஜைகள் நிறைவு பெற்று வியாழக்கிழமை காலை மூலஸ்தான கோபுர கலசத்துக்கும், மாசி பெரியண்ணசாமி மற்றும் மதுரகாளியம்மன் சுவாமிகள் சந்நிதியின் கோபுர கலசத்துக்கும் சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com