திருச்சி
காவல் துறை சாா்பில் 29 வாகனங்கள் ரூ.9.63 லட்சத்துக்கு ஏலம்
மாநகரக் காவல் துறை சாா்பில் போதை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29 வாகனங்கள் ரூ.9.62 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
மாநகரக் காவல் துறை சாா்பில் போதை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29 வாகனங்கள் ரூ.9.62 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினியின் உத்தரவின்பேரில் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) முன்னிலையில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு 29 வாகனங்ளையும் ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 116-க்கு (ஜிஎஸ்டி உள்பட) ஏலம் எடுத்தனா். இந்தத் தொகை மாநகரக் காவல் துறை சாா்பில் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
