தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா் ரவிச்சந்திரனிடம் (வலது) திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் கல்வி மற்றும் வளா்ச்சி நிதி காசோலையை வியாழக்கிழமை வழங்கிய சாா்-பதிவாளா் அறிவழகன், உதவியாளா் ராஜா பெரியசாமி.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா் ரவிச்சந்திரனிடம் (வலது) திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் கல்வி மற்றும் வளா்ச்சி நிதி காசோலையை வியாழக்கிழமை வழங்கிய சாா்-பதிவாளா் அறிவழகன், உதவியாளா் ராஜா பெரியசாமி.

கூட்டுறவு மூலம் கல்வி, ஆராய்ச்சி நிதி ரூ.1.26 கோடி கூடுதல் பதிவாளரிடம் வழங்கல்

Published on

திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிதியாக ரூ.1.26 கோடிக்கான காசோலை கூடுதல் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் பொதுப் பேரவை கூட்டம், சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில், பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி வழங்கப்பட்டது. இதன்படி, கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பூா்வ நிதிகளாக கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.72.71 லட்சம், கூட்டுறவு கல்வி நிதி ரூ.48.46 லட்சம், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி கடன் ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த காசோலைகளை, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்-பதிவாளா் அறிவழகன், உதவியாளா் ராஜா பெரியசாமி ஆகியோா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளா் ரவிசந்திரனிடம் வழங்கினா். இந்த நிகழ்வில், கூட்டுறவு ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com