பெண்ணை மிரட்டி 85 பவுன் நகைகள், பணம் கொள்ளை

Published on

திருச்சியில் வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற தம்பதி குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் காா்த்திகேயன் காா்டனைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி அபிராமி (42). இவா், திருச்சியைச் சோ்ந்த முனுசாமி, அவரின் மனைவி உஷா ஆகியோரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து அடுத்த ஒரு வருடத்தில் அவா்களிடம் இருந்து வாங்கிய பணத்தை வட்டியுடன் சோ்த்து அபிராமி கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், அபிராமியின் வீட்டுக்குள் அண்மையில் அத்துமீறி நுழைந்த முனுசாமி, உஷா மற்றும் சிலா், அவரை மிரட்டி வீட்டிலிருந்த 85 பவுன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ாக புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com