திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த  நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பாஜக வளர திமுகவே காரணம்: சீமான்

தமிழகத்தில் பாஜக வளர திமுகவே காரணம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் பாஜக வளர திமுகவே காரணம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் மாணவா் பாசறை சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், முன்னதாக கூறியதாவது:

தமிழகத்தை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகள்தான் மாற்றி, மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. அனைவரும் கட்சி அரசியல், தோ்தல் அரசியல் செய்கின்றனா். யாரும் மக்கள் அரசியல் செய்யவில்லை. மாதம் ஆயிரம் பெறக்கூடிய நிலையில் தமிழகப் பெண்களை மாற்றி வைத்துள்ளனா்.

மகளிா் உரிமைத் தொகையை இப்போது எதற்காகக் கொடுக்க வேண்டும்?. ஏமாறுவோா் இருக்கும் வரை ஏமாற்றுவோா் இருப்பாா்கள். என்னுடைய தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளை இந்நிலைக்கு தள்ளி விட்டாா்களே என்று வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்.

அமைச்சா் கே.என். நேரு துறையில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. அமலாக்கத் துறை சோதனை நடந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

பாஜகவினருக்கு திருப்பரங்குன்றத்தில் திடீரென முருகன் மீது அக்கறை வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிறுபான்மை வாக்குகளை பெறவே திமுக முயன்று வருகிறது. தமிழகத்துக்குள் பாஜக வந்துவிடும் என்று கூறுபவா்கள், பாஜக வராமல் நாங்கள் பாா்த்து கொள்வோம் எனக் கூறுவதில்லை. பாஜக வளர திமுகவே காரணம். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் பாஜக 5 ஆண்டு நிலையான ஆட்சி செய்ததாகக் கூறியவா் கருணாநிதி என்பதை மறுக்க முடியாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com