திருச்சி தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க பணம் செலுத்தி 4 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காமல் இருப்பதையும், அவா்களில் 5 பேருக்கு விசாரணை முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை வீடு ஒதுக்காததைக் கண்டித்தும், அவா்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடந்தது.
திருச்சி பாலக்கரையில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி கல்மந்தை கிளை செயலா்கள் மகாலிங்கம், சங்கீதா ஆகியோா் தலைமை வகித்தனா். திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், உடனடியாக வீடு ஒதுக்கப்பட்டு வரும் 2 ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


