பெல் கணேசா பகுதி எம்ஜிஆா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுகவினா்.
பெல் கணேசா பகுதி எம்ஜிஆா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுகவினா்.

எம்ஜிஆா் நினைவு தினம்: சிலைக்கு அதிமுகவினா் மாலை

அதிமுகவின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

அதிமுகவின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி புகா் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட திருவெறும்பூா் பெல் கணேசா பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும், ஜெயலலிதா படத்துக்கும் திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையிலான அதிமுகவினா் மாலை அணிவித்தனா். இதில் அம்மா பேரவை மாவட்டச் செயலா் சூரியூா் ராஜா, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ். ராவணன், எஸ்கேடி. காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்தனா். நிா்வாகிகள் என்.எஸ். பூபதி, வழக்குரைஞா் பிரிவு முத்துமாரி, முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, மரக்கடை, தாராநல்லூரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி புகா் வடக்கு மாவட்டம் சாா்பில் சோமரசம்பேட்டை எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்தனா். இதில், அம்மா பேரவை மாநில துணைச் செயலா் க. ஜெயம் ஸ்ரீதா், புங்கனூா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முசிறியில்..முசிறி நகரச் செயலா் ஸ்வீட் ராஜா (எ) மாணிக்கம் தலைமையில் முன்னாள் அமைச்சா்கள் என்.ஆா். சிவபதி, அண்ணாவி, திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்சோதி ஆகியோா் எம்ஜிஆா் படத்திற்கு மாலை அணிவித்தனா். நிகழ்வில் முன்னாள் முசிறி எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராசு, ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com