தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியிலுள்ள தேவாலயங்களில் புதன்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியிலுள்ள தேவாலயங்களில் புதன்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

திருச்சி மெயின்காா்டுகேட் பகுதியிலுள்ள தூய லூா்து அன்னை பேராலயம், மேலப்புதூா் புனித மரியன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா திருத்தலப் பேராலயம், புத்தூா் சகல பரிசுத்தா் ஆலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், ஸ்ரீரங்கம் அந்தோணியாா் ஆலயம், காட்டூா் குழந்தை ஏசு ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளாகப் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com