திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெரியாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா். ~திருச்சி மத்திய பேருந்து நிலைய பெரியாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா்.

பெரியாா் நினைவு தினம்: சிலைக்கு கட்சியினா் மாலை

தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமையிலான திமுகவினா் மாலை அணிவித்தனா். இதில் மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூா் அருகே காட்டூரில் உள்ள பெரியாா் சிலைக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்தனா். மாநகரச் செயலா் மு. மதிவாணன், கவிஞா் சல்மா எம்பி, முன்னாள் எம்எல்ஏ சேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஜெ. சீனிவாசன் தலைமையிலான அதிமுகவினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதேபோல, மதிமுக சாா்பில் மாநில துணைப் பொதுச்செயலா் ரோஹையா தலைமையில் மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமையிலும், திக சாா்பில் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையிலும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com