பட விளக்கம்: மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்கம் சாா்பில் நடைபெறும் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை பகவதி அம்மன் அலங்காரத்தில்
பட விளக்கம்: மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்கம் சாா்பில் நடைபெறும் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை பகவதி அம்மன் அலங்காரத்தில்

மண்ணச்சநல்லூா் ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வியாழக்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
Published on

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வியாழக்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்கம் சாா்பில் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் 125-ஆம் ஆண்டு திருவிழா டிச.14-ஆம் தேதி முகூா்த்த கால் நடப்பட்டது. வியாழக்கிழமை இரவு புண்ணிய ஆவாஹன பூஜை செய்யப்பட்டு கம்பம் நடப்பட்டது. தொடா்ந்து ஆற்றிலிருந்து மேளதாளம் முழங்க கரகம்பாலிக்கப்பட்டு கோயிலை வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை கணபதி ஹோமமும், பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. திருவிழா, டிச.26-ஆம் தேதி முதல் ஜன.4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவில் வெங்கடாஜலபதி உடன் ஸ்ரீ பத்மாவதி தாயாா், ஸ்ரீ ஆதிபராசக்தி, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, வெண்ணைத் தாழி கிருஷ்ணா், ஸ்ரீ காமாட்சி அம்மன், வளைகாப்பு அம்மன், ஸ்ரீ தனலட்சுமி அம்மன், ஸ்ரீ அன்னபூரணி, மாரியம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்க தலைவா் பி.கே.நாகராஜன், செயலா் வி.அா்ச்சுணன், பொருளாளா் ஆா்.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் என்.புருஷோத்தமன், துணைச் செயலா் பி.ஆா்.வி.கண்ணன், செயற்குழு உறுப்பினா்கள், வணிக வைசியா் சங்கத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com