ஸ்ரீரங்கம் கோயிலில் 2 நாளில் 1.50 லட்சம் போ் தரிசனம்

Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவில் பெருமாளை தரிசனம் செய்ய வியாழன்,வெள்ளி ஆகிய 2 நாள்களில் 1.50 லட்சத்துக்கு மேல் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவானது வைகுந்த ஏகாதசி விழாவாகும். இந்த விழாவில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா். தற்போது பகல்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் மற்றும் ஆதிபராசக்தி பக்தா்களாலும் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் மட்டும் சுமாா் 1.50 லட்சத்துக்கும் மேல் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தெற்குவாசல் பகுதி, மேலூா் பகுதியில் பேருந்து நிறுத்தம் பகுதி, அம்மா மண்டபம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com