ரயில்.
ரயில்.

ராமேசுவரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலைக் குறைக்க ராமேசுவரம் - பனாரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Published on

கூட்ட நெரிசலைக் குறைக்க ராமேசுவரம் - பனாரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, ராமேசுவரம் - பனாரஸ் சிறப்பு விரைவு ரயில் (06099) வரும் 30 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது ராமேசுவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ரங்கம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், பல்ஹா்ஷா, நாக்பூா், இட்டாா்சி, ஜபல்பூா், கட்னி, சாத்னா, மாணிக்பூா், பிரக்யராஜ் சேயோகி வழியாக பனாரஸுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்றடையும்.

X
Dinamani
www.dinamani.com