தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் சீா்காழியில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயிலானது (20691) வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் சீா்காழியில் பிற்பகல் 2.44-க்கு நின்று 2.45-க்குப் புறப்படும். மறுமாா்க்கமாக, நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலானது (20692) வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் நள்ளிரவு 12.07-க்கு நின்று 12.08-க்குப் புறப்படும். சோதனை முறையில் இந்த நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.