லால்குடியில் நாளை மின்தடை

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடியில் புதன்கிழமை (பிப். 5) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, லால்குடி, ஏ.கே. நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா் நகா், பாரதி நகா், வ.உ.சி. நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவா்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, திருமணமேடு தெற்கு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் வரும் புதன்கிழமை (பிப்.5) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com