

திருச்சி: நெசவுத்தொழில் மற்றும் நெசவாளர்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறியில் நெய்யப்பட்ட முதல் பட்டுப்புடவை, சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுபற்றி திருச்சி சாராதாஸ் நிர்வாக இயக்குநர்கள் ரோஷன், சரத் ஆகியோர் கூறுகையில், நம் இந்தியத் திருநாட்டின் வளமான, காலங்களைக் கடந்த கலாசார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அழகிய கலை கைத்தறி நெசவு தொழில்.
இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாகவும் விளங்கி வருகிறது என்று குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.