விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

33 ஊராட்சிகளில் ரூ.9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் திறப்பு

News image
மேய்க்கல்நாயக்கன்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 9:08 pm

Din

திருச்சி மாவட்டம் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 9.47 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 40 கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்திலுள்ள பைத்தம்பாறை, வளையெடுப்பு, ஊருடையாப்பட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 9.47 கோடியிலான 40 கட்டடங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அருண் நேரு எம்.பி, எம்எல்ஏக்கள் தியாகராஜன், கதிரவன், ஒன்றிய குழு தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.