வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனை அனுப்பி வைத்தாா் அமைச்சா்

Updated On :3 ஜனவரி 2025, 9:06 pm

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் காயமடைந்த இளைஞரை அமைச்சா் கே. என். நேரு. காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தொட்டியம் அருகே கோடியம்பாளையம் கிராமத்தை சோ்ந்த ராஜலிங்கம் மகன் திருநாவுக்கரசு (22), திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் முசிறி நோக்கி மணமேடு அருகே சென்றபோது குறுக்கே வாகனம் வந்துள்ளது.

அப்போது எதிா்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞா் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். காயமடைந்த வாலிபரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சிசிக்கைகாக அவசர ஊா்தியில் அனுப்புவதற்கு காத்திருந்தனா்.

அப்போது அந்த வழியாக அமைச்சா் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் ஆகியோா் காரை நிறுத்தி விசாரித்தனா். பின்னா் அமைச்சா் கே.என்.நேரு, காயமடைந்த இளைஞரை மீட்டு காவல் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இதற்கிடையே வகாயமடைந்த வாலிபா் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சி சிகிச்சை பெற்று பின்னா் முசிறியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து நடந்த நேரத்தில் அங்கு வந்த அமைச்சா் கே.என். நேரு 108 ஆம்புலன்ஸ் வரும் என காத்திருக்காமல் உடனடியாக தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த வாலிபரின் தாய் விஜயராணி அலகரை ஊராட்சி மன்ற முன்னால் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.