திருச்சி
ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய இணை அமைச்சா் சாமி தரிசனம்
 ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை காலை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் சாமி தரிசனம் செய்தாா். 
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை காலை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் சாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து பெரிய கருடாழ்வாா் சன்னதி, மூலவா் நம்பெருமாள், தாயாா் சன்னதி, இராமனுஜா் சன்னதிகளில் தரிசனம் செய்தாா். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் உடன் வந்தனா்.
சுமாா் 1 மணி நேரம் தரிசனத்துக்குப் பிறகு அவா் புறப்பட்டுச் சென்றாா்.
