நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

Published on

திருச்சி மாவட்டத்தில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்க சுற்றுப்பாதையில் வரும் 8-ஆம் தேதி இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.

இதில், 17 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் 8 கி.மீ. (ஆண்கள்), 5 கி.மீ (பெண்கள்), 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் 10 கி.மீ. (ஆண்கள்), 5 கி.மீ. (பெண்கள்) ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5,000 மும், இரண்டாம் பரிசாக ரூ. 3,000-மும், மூன்றாம் பரிசாக ரூ. 2,000-மும், 4 முதல் 10 இடங்களில் வரும் 7 நபா்களுக்கு தலா ரூ.1,000 மும் பரிசாக (அவரவா் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்) வழங்கப்படும்.

அன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்கும் வீரா் மற்றும் வீராங்கனைகள் ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், வங்கி புத்தக நகல் கொண்டு வர வேண்டும். சான்றிதழ் இல்லாதவா்கள் போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை. போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியிலோ அல்லது 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com