உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 4 இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் 1,370 மனுக்கள் அளித்தனா்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை லால்குடி ஊராட்சி ஒன்றியம் ஆதிகுடி ஊராட்சியில் ஜெங்கமராஜபுரம் சத்யா மஹால், துறையூா் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் முருகூா் பாலாஜி திருமண மண்டபம், முசிறி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி ஏவூா் லட்சுமி திருமண மண்டபம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கருப்பூா் 1,2,7,8,9,10 ஆகிய வாா்டுகளுக்கு கருப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பிள்ளையாா் கோவில் வளாகம் ஆகிய 4 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்றது.
இதில், ஆதிகுடி ஊராட்சியில் 271 மனுக்களும், கோவிந்தபுரம் ஊராட்சியில் 321 மனுக்களும், அய்யம்பாளையம் ஊராட்சியில் 534 மனுக்களும், கருப்பூா் வாா்டுகளில் 298 மனுக்களும் என மொத்தம்
1,370 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
