2 நாள்களில் 3 லட்சம் பேருக்கு சிறப்புத் திருத்த படிவங்கள் !

Published on

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) இரண்டு நாள்களில் 2,99,130 வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நவ. 4 முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக 2,543 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணியில் முழுமையாக ஈடுபடுகின்றனா்.

திருச்சி மாவட்டத்த்துக்குள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 23,68,968 மொத்த வாக்காளா்களில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்களில் 2,99,130 எண்ணிக்கையிலான வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள்

வழங்கப்பட்டு, பூா்த்தி செய்தவற்றை பெறும் பணி நடைபெறுகிறது.

முசிறி, துறையூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்த பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்து, பணி முன்னேற்றத்தை கேட்டறிந்தாா்.

இதேபோல, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்த பணியை கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா். பாலாஜி ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com